Thursday, May 7, 2015

திருப்பூர்: இன்று பிளஸ் 2 ரிசல்ட் வெளியானது 1192 மார்க்குகள் பெற்று 2 மாணவிகள் முதலிடத்தை பிடித்துள்ளனர்.


ஆர்வமாக படித்ததாலும் அதிக நேரம் உழைத்ததாலும் தான் முதல் ரேங்க் பிடிக்க முடிந்தது என திருப்பூரை சேர்ந்த பவித்ரா அளித்த பேட்டியில் கூறியுள்ளார் திருப்பூரி்ல் இருந்து 7 கி.மீட்டர் தொலைவில் கூலிபாளையம் உள்ளது. இங்குள்ள விகாஸ் மெட்ரிக் பள்ளியில் படித்து வந்தவர் பவித்ரா. இவரது தந்தை பெயர் ஜானகிராமன், தாயார் ராதா தந்தை தனியார் பனியன் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.

இவரது மகள் 1192 மார்க்குகள் பெற்றுள்ளார். இவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: நான் ஆரம்பத்தில் இருந்தே ஆர்வமாக படித்து வந்தேன். பழைய கேள்வித்தாள்களையும் படித்தேன். இரவு 7. 30 மணி வரை வகுப்புகள் நடக்கும். அதிகாலை 3.30 க்கு எழுந்து படித்தேன். ஆசிரியர்கள், பெற்றோர் கொடுத்த ஒத்துழைப்பே எனது வெற்றிக்கு காரணமாக அமைந்தது. வரும் காலத்தில் சார்ட்டர்டு அக்கவுண்டன்சி படித்து உயர் பணிக்கு செல்ல ஆர்வமாக உள்ளேன். இவ்வாறு பவித்ரா கூறினார் .


Add caption


No comments: