Saturday, April 18, 2015

ஜூன் 1-ந்தேதி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் கிடைக்கும்: பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பேட்டி

பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் த.சபீதா நேற்றுநிருபர்களிடம் கூறியதாவது:-


20152015ம் கல்வி ஆண்டில் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் ஜூன்மாதம் 1ந்தேதி திறக்கின்றன. பள்ளிக்கூடம் திறக்கும் முன்பேஅவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள்அச்சடிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. 
ஏற்கனவே பள்ளிக்கூடம்திறந்த அன்றுதான் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுவந்தன. வருகிற கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2படிக்கப்போகும் மாணவர்களுக்கு முன்கூட்டியே பாடப்புத்தகங்கள்வழங்கப்பட்டுள்ளன. அரசு வழங்கும் விலை இல்லாத 14 விதபொருட்களும் மாணவர்களுக்கு தேவைப்படும்போது உரிய நேரத்தில்வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல வருகிற கல்வி ஆண்டிலும்வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு த.சபீதா தெரிவித்தார்.
2012- ஆண்டு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரிஆசிரியர்கள் நியமனத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது.அப்போது தரணிகோட்ட ஸ்ரீவித்யா என்பவர் போலியாக சாதி சான்றுகொடுத்து பணியில் சேர்ந்துள்ளார். ஆனால் அவர் இன்றுவரைஆசிரியர் பணியில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது பணிரத்தாகுமா? என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர்த.சபீதாவிடம் கேட்கப்பட்டது.
உடனே அருகில் இருந்த பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பனைஅழைத்து இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுங்கள் என்றார்.முன்னதாக சென்னை டி.பி.ஐ.வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல்மற்றும் கல்வியியல் பணிகள் கழக மாநாட்டு வளாகத்தில் 2011-2012ம்ஆண்டு முதல் 2014-2015 ம் ஆண்டு வரை பள்ளிக்கல்வித்துறைஅறிவித்த அறிவிப்புகள் மற்றும் அந்த அறிவிப்புகளின் தற்போதையநிலை குறித்தும் கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டியநடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணிதலைமை தாங்கினார். கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைசெயலாளர் த.சபீதா, கல்வி திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி,ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் விபுநய்யர், தமிழ்நாடு பாடநூல்மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குனர்மைதிலி ராஜேந்திரன், பள்ளிக்கல்விதுறை துணை செயலாளர்சுபோத் குமார், பள்ளிக்கல்வி துறை இயக்குனர்கள் க.அறிவொளி,ரெ.இளங்கோவன், பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன்,தண்.வசுந்தராதேவி, வி.சி.ராமேஸ்வர முருகன், பிச்சை மற்றும்இணை இயக்குனர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்

No comments: