Wednesday, April 22, 2015

அணுகுண்டைவிட அபாயகரமானது பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள்: பூமி மீதான அக்கறை அனைவருக்கும் ஏற்பட வேண்டும்

உலக பூமி தினம், ஆண்டுதோறும் ஏப்ரல் 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது. சுத்தமான பூமி, பசுமை யான பூமி என்பதை நோக்கமாகக் கொண்டு, இந்த ஆண்டு உலக பூமி தினம் கொண்டாடப்படுகிறது.
உலக பூமி தினம், ஆண்டுதோறும் ஏப்ரல் 22-ம் தேதி கொண்டாடப் படுகிறது. சுத்தமான பூமி, பசுமை யான பூமி என்பதை நோக்கமாகக் கொண்டு, இந்த ஆண்டு உலக பூமி தினம் கொண்டாடப்படுகிறது.Keywords: பிளாஸ்டிக், கழிவுப்பொருட்கள், அணுகுண்டு, பூமி, உலக பூமி தினம்மனிதனின் நுகர் வுக் கலாச்சாரம், பூமியின் ஆயுளை ஒவ்வொரு நாளும் சத்தமில்லாமல் குறைத்து வருவதாக எச்சரிக்கிறார், திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழக புவி அறிவியல் ஆய்வுமையப் பேராசிரியர் குருஞானம். இது குறித்து `தி இந்து'விடம் அவர் கூறியதாவது:
‘‘நீர் மண்டலம் பூமிக்கு மட்டும் கிடைத்த தனிச் சிறப்பாகும். அந்த காலத்தில், எங்கு தண்ணீர் இருந்ததோ அங்கு கிராமங்கள் இருந்தன. அதனாலேயே ஆறு, குளம் உள்ளிட்ட நீரோட்டங்களின் அருகிலேயே குடியிருப்புகள் இருந் தன. நாளடைவில், மனிதர்கள் தன்னுடைய நீர் தேவைக்காக, 5, 10 அடி ஆழத்தில் குழி தோண்ட ஆரம்பித்தனர். அதை ஊற்று என்றனர். ஊற்றில் நீர் ஆதாரம் குறைந்தபோது, 200 அடி, 300 அடியில் குழிகளைத் தோண்டி, அதை கிணறு என்றனர். தற்போது, 600 அடியில் தொடங்கி 1000 அடி வரை சர்வ சாதாரணமாக பூமியை துளையிட ஆரம்பித்துவிட்டனர்.
பூமியானது தண்ணீரை நம்பியே இருக்கிறது. தண்ணீர் மழையை நம்பியிருக்கிறது. மழை இயற்கையை நம்பி இருக் கிறது. இயற்கையை மனிதன் அழிப்பதால் மழை குறைந்து விட்டது. பூமியைக் காப்பாற்ற இயல் பான இயற்கையை பாதுகாக்க வேண்டும்’’ என்றார் அவர்.
பூமியைக் காப்பாற்ற மரக்கன்றுகள் நடுவதே தீர்வு
இயற்கை அளிக்கும் மழை நீர், பூமிக்குள் செல்வதை பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் தடுக்கின்றன. காகிதங்கள், காய்கறி மற்றும் பழங்கள் உள்ளிட்ட கழிவுகளை பூமியில் போட்டால், அவை பூமியைவிட்டு நீங்க ஒரு மாதம் முதல் 2 மாதங்கள் வரை ஆகும்.
தெர்மக்கோல் கப்புகளை போட்டால் 50 ஆண்டுகளும், பிளாஸ்டிக் கேன்களை போட்டால் 80 முதல் 200 ஆண்டுகளும், பிளாஸ்டிக் பைகளை போட்டால் 50 முதல் 1000 ஆண்டுகளும், பாட்டில்களுக்கு ஒரு மில்லியன் ஆண்டுகளும் ஆகும்.
இதில் பிளாஸ்டிக் கழிவுகள் அணுகுண்டைவிட அபாயகரமானவை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பூமியைக் காப்பாற்ற, பூமியின் மீது ஒவ்வொரு மனிதருக்கும் ஆர்வமும், அக்கறையும் ஏற்பட வேண்டும். அதற்கு, நிறைய மரக்கன்றுகளை நட வேண்டும். by The HIndu tamil news paper

No comments: