Thursday, May 7, 2015

பிஇ கவுன்சலிங்: விண்ணப்பிப்பது எப்படி? -பொன்.தனசேகரன்

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சலிங்கிற்கு மே 6-ஆம் தேதியிலிருந்து விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. பிளஸ் டூ படித்து விட்டு பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் உள்ள இடங்கள், பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் மெக்கானிக்கல் மற்றும் சிவில் (தமிழ் மீடியம்) பட்டப் படிப்புகளில் உள்ள இடங்கள், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள இடங்கள், சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களில் கவுன்சலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். வழக்கம் போல, இந்த ஆண்டும் அண்ணா பல்கலைக்கழகம் இந்தக் கவுன்சலிங்கை நடத்துகிறது.

சமச்சீர்க்கல்வியை தமிழக அரசு முறையாக அமல்படுத்தத் தவறியதால், மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய கணக்கீட்டின் படி, 8,000 தனியார் பள்ளிகள் இருந்தன. இதில், 4,800 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள், 3,500 மெட்ரிக், 41 ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், 159 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அடங்கும்.தற்போது பெரும்பாலான மெட்ரிக் மற்றும் பிரைமரி பள்ளிகள், மத்திய அரசின், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாறி வருகின்றன.

துபாய்: இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

துபாய்: இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியது. அதில் தமிழகத்தின் மாவட்ட வாரியாக மாணவ மாணவியரின் தேர்ச்சி விகிதம் குறித்த பட்டியல் பற்றிய தகவல்கள் வெளியாகின. அதில் துபாயும் இடம் பெற்றிருந்தது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை துபாய் கிரசண்ட் பள்ளி மூலம் 20 மாணவர்கள் எழுதினர். அதில் 19 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். எனவே இந்த ஆண்டு துபாய் பள்ளியின் தேர்ச்சி சதவீதம் 95 சதவீதம் ஆகும். மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள துபாய் கிரசண்ட் பள்ளியில் படிக்கும் தமிழக மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 அரசுத்தேர்வுத்துறை மூலம் எழுதுகிறார்கள்.

பள்ளிக்கல்வி - 01.01.2015 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கான முன்னுரிமைப் பட்டியல்

பி.இ விண்ணப்பதுடன் இணைக்க வேண்டிய சான்றிதழ்கள்

பொறியியல் படிப்புகளில் சேரப்போகும் மாணவர்களின் வசதிக்காக பி.இ. கலந்தாய்வு விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள், சான்றிதழ்கள் அவற்றை எங்கே பெறுவது என்பன குறித்த விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

திருப்பூர்: இன்று பிளஸ் 2 ரிசல்ட் வெளியானது 1192 மார்க்குகள் பெற்று 2 மாணவிகள் முதலிடத்தை பிடித்துள்ளனர்.


ஆர்வமாக படித்ததாலும் அதிக நேரம் உழைத்ததாலும் தான் முதல் ரேங்க் பிடிக்க முடிந்தது என திருப்பூரை சேர்ந்த பவித்ரா அளித்த பேட்டியில் கூறியுள்ளார் திருப்பூரி்ல் இருந்து 7 கி.மீட்டர் தொலைவில் கூலிபாளையம் உள்ளது. இங்குள்ள விகாஸ் மெட்ரிக் பள்ளியில் படித்து வந்தவர் பவித்ரா. இவரது தந்தை பெயர் ஜானகிராமன், தாயார் ராதா தந்தை தனியார் பனியன் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.

இவரது மகள் 1192 மார்க்குகள் பெற்றுள்ளார். இவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: நான் ஆரம்பத்தில் இருந்தே ஆர்வமாக படித்து வந்தேன். பழைய கேள்வித்தாள்களையும் படித்தேன். இரவு 7. 30 மணி வரை வகுப்புகள் நடக்கும். அதிகாலை 3.30 க்கு எழுந்து படித்தேன். ஆசிரியர்கள், பெற்றோர் கொடுத்த ஒத்துழைப்பே எனது வெற்றிக்கு காரணமாக அமைந்தது. வரும் காலத்தில் சார்ட்டர்டு அக்கவுண்டன்சி படித்து உயர் பணிக்கு செல்ல ஆர்வமாக உள்ளேன். இவ்வாறு பவித்ரா கூறினார் .


சி.ஏ. படிக்க விருப்பம்: முதலிடம் பிடித்த கோவை மாணவி நிவேதா:

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தமிழக அளவில் கோவையைச் சேர்ந்த மாணவி நிவேதா 1,200க்கு 1192 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.இவர், கணக்கு தணிக்கையாளராக அதாவது சார்ட்டர்ட் அக்கவுண்டிங் படிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அந்த எண்ணத்தில்தான் தான் அக்கவுண்டன்சி குரூப்பை தேர்வு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.நிவேதாவின் தந்தை லட்சுமி நாராயணன் நகை செய்யும் தொழிலாளியாவார்.

பிளஸ் 2 மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்.


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று காலைவெளியிடப்பட்டுள்ளன. இதில் மாவட்ட வாரியாக தேர்வில்பங்கேற்றவர்கள், தேர்ச்சி பெற்றவர்கள், விகிதம் ஆகியவற்றின்பட்டியல்:
விருதுநகர் - 22304 - 21737 - 97.46
பெரம்பலூர் - 8296 - 8068 - 97.25
ஈரோடு - 26835 - 25779 - 96.06
நாமக்கல் - 31020 - 29702 - 95.75

தூத்துக்குடி - 19651 - 18766 - 95.5
திருச்சி - 32476 - 30969 - 95.36
கன்னியாகுமரி - 25322 - 24108 - 95.36
ராமநாதபுரம் - 14844 - 14051 - 94.66
கோயம்பத்தூர் - 36908 - 34825 - 94.36
திருப்பூர் - 23238 - 21916 - 94.31
சிவகங்கை - 15930 - 15001 - 94.17
திருநெல்வேலி - 34565 - 32461 - 93.91
தேனி - 14814 - 13896 - 93.8
மதுரை - 37143 - 34495 - 92.87
தர்மபுரி - 20514 - 18936 - 92.31
கரூர் - 10918 - 10013 - 91.71
சென்னை 53180 - 48679 - 91.54
சேலம் - 39613 - 35927 - 90.69
காஞ்சிபுரம் - 44676 - 40514 - 90.68
தஞ்சாவூர் - 29598 - 26715 - 90.26
திண்டுக்கல் - 22495 - 20294 - 90.22
புதுக்கோட்டை - 18076 - 16188 - 89056
புதுச்சேரி - 14252 - 12563 - 88.15
திருவள்ளூர் - 41365 - 36121 - 87.32
ஊட்டி - 8559 - 7424 - 86.74
கிருஷ்ணகிரி - 21392 - 18499 - 86.48
நாகப்பட்டினம் - 18105 - 15652 - 86.45
கடலூர் - 28093 - 23792 - 84.69
விழுப்புரம் - 36738 - 30846 - 83.96
திருவண்ணாலை - 24362 - 20326 - 83.43
திருவாரூர் - 14221 - 11815 - 83.08
வேலூர் - 42220 - 34364 - 81.39

அரியலூர் - 7548 - 6108 - 80.92

மொழிப்பாட வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள்:


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மொழி வாரியாக முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவர்களின் பட்டியல்.

அராபிக் மொழிப் பாடம்

ஜே.எம் அஹமத் நிஷாத் - 194 - 1056 ( முதலிடம் )

எம்.ஏ மொகமத் பார்திமா - 194 -1053 ( இரண்டாம்)

பாளையம் நபீஷாத் அமீனா 194- 1049 (மூன்றாம் இடம்)

பிரெஞ்ச் மொழிப் பாடம்

கி.ஸ் ஸ்ரேஷா - 198 - 1194 (முதலிடம்)

எஸ். பிரித்தி - 198 - 1193 ( இரண்டாம் இடம்)

எஸ்.பார்வதி - 198 - 1193 (இரண்டாம் இடம்)

ஆர். ரத்னா சுதாகர் - 198 - 1192 (மூன்றாம் இடம்)

HSC 12th Result March 2015 Exam


HSC 12th Result Direct Links



Direct Link - Click Here **New**




Link 1: http://tnresults.nic.in