Wednesday, May 6, 2015

மாதிரிப் பள்ளிகள் திட்டத்தை கைவிடுகிறது மத்திய அரசு

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில்44 பள்ளிகள்உள்பட நாடு முழுவதும் 3,453 மாதிரிப் பள்ளிகள்அமைக்கும்திட்டத்தைக் கைவிட மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

நாடு முழுவதும் கல்வியில் பின்தங்கிய வட்டாரங்களில் கேந்திரியவித்யாலயா பள்ளிகளுக்கு இணையான தரத்தில் நவீன கட்டடங்கள்,வகுப்பறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் மாதிரிப் பள்ளிகள்அமைக்கப்படுகின்றன.இந்தப் பள்ளிகளில் மாணவர்களுக்குகல்வியோடு இசைஓவியம்யோகாஉடற்பயிற்சி உள்ளிட்டவையும்கற்றுத் தரப்படுகின்றன.தமிழகத்தில் கல்வியில் பின்தங்கிய 44வட்டாரங்களில் 44 மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்பட்டுவருகின்றன.ஒவ்வொரு பள்ளியும் ரூ.3 கோடி செலவில்அமைக்கப்படுகிறது.இவற்றில் 14 மாதிரிப் பள்ளிகளுக்கான கட்டுமானம் நிறைவடைந்தநிலையில்மீதமுள்ள 30 பள்ளிகளில் பணிகள் பல்வேறு நிலைகளில்உள்ளனபணிகள் நிறைவடையாத இடங்களில் வாடகைக்கட்டடங்களில் பள்ளிகள் இயங்கி வருகின்றனஇந்த மாதிரிப்பள்ளிகளைக் கட்டுவதற்கான நிதிபணியாற்றும் ஆசிரியர்களுக்கானஊதியம் உள்ளிட்டவற்றை அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தின் மூலம் மத்திய அரசு வழங்கி வந்ததுஇந்த நிலையில்,மாதிரிப் பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்தப் போவதாகமத்திய அரசு திடீரென்று அறிவித்துள்ளதுஇது தொடர்பாகஅனைத்துமாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.எனினும்,தமிழகத்தில் மாதிரிப் பள்ளிகளைக் கட்டுவதற்கான நிதி ஏற்கெனவேஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதால்அந்த நிதியை வழங்க மத்தியஅரசு ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.மத்திய அரசின் இந்த முடிவையடுத்துதமிழகத்தில் இந்தப்பள்ளிகளில் படித்து வரும் சுமார் 10 ஆயிரம் ஏழை மாணவர்கள், 700-க்கும் அதிகமான ஆசிரியர்களின் எதிர்காலம்கேள்விக்குறியாகியுள்ளது.இந்தப் பள்ளிகளில் படித்து வரும் ஏழைமாணவர்கள்ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாநிலஅரசு உரிய முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.3,453பின்தங்கிய வட்டாரங்கள்நாடு முழுவதும் பெண் கல்வியில்பின்தங்கிய வட்டாரங்கள் கல்வியில் பின்தங்கிய வட்டாரங்கள் எனஅழைக்கப்படுகின்றனஅதனடிப்படையில்நாடு முழுவதும் 3,453வட்டாரங்களும்தமிழகத்தில் 44 வட்டாரங்களும் கல்வியில்பின்தங்கிய வட்டாரங்களாக கண்டறியப்பட்டன.தமிழகத்தில்,அரியலூர்கடலூர்தருமபுரிஈரோடுதிருப்பூர்கிருஷ்ணகிரி,பெரம்பலூர்சேலம்திருவண்ணாமலைவிழுப்புரம்நாமக்கல்கரூர்,சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இந்த 44 வட்டாரங்கள்உள்ளன.அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ்கல்வியில் பின்தங்கிய வட்டாரங்களில் மாதிரிப் பள்ளிகள்அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.தமிழகத்தில் 44வட்டாரங்களில் இந்த மாதிரிப் பள்ளிகளை அமைக்கும் பணி 2010-11-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதுபணிகள் நிறைவடையாதஇடங்களில்வாடகைக் கட்டடங்களில் மாதிரிப் பள்ளிகள் இயங்கிவருகின்றன.
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மாதிரிப் பள்ளிகளுக்கானகட்டடங்கள் ஏறத்தாழ கட்டப்பட்டு விட்டனஆனால்பிகார்,உத்தரப்பிரதேசம் போன்ற பின்தங்கிய மாநிலங்களில் 500-க்கும்மேற்பட்ட மாதிரிப் பள்ளிகளை அமைக்க வேண்டும்இந்தமாநிலங்களில் மாதிரிப் பள்ளிகளை அமைக்கும் பணிகள் இன்னும்தொடங்கப்படவேஇல்லைஇந்த நிலையில்இந்தத் திட்டத்துக்கானநிதி ஒதுக்கீட்டை நிறுத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

No comments: