Thursday, May 7, 2015

துபாய்: இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

துபாய்: இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியது. அதில் தமிழகத்தின் மாவட்ட வாரியாக மாணவ மாணவியரின் தேர்ச்சி விகிதம் குறித்த பட்டியல் பற்றிய தகவல்கள் வெளியாகின. அதில் துபாயும் இடம் பெற்றிருந்தது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை துபாய் கிரசண்ட் பள்ளி மூலம் 20 மாணவர்கள் எழுதினர். அதில் 19 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். எனவே இந்த ஆண்டு துபாய் பள்ளியின் தேர்ச்சி சதவீதம் 95 சதவீதம் ஆகும். மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள துபாய் கிரசண்ட் பள்ளியில் படிக்கும் தமிழக மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 அரசுத்தேர்வுத்துறை மூலம் எழுதுகிறார்கள்.


இங்கே எப்படி தமிழகம் தவிர பாண்டிச்சேரிக்கு தேர்வு நடத்தப்படுகிறதோ, அதே மாதிரிதான் துபாய் பள்ளி மாணவர்களுக்கும் தேர்வு நடத்தப்படுகிறது பொதுத்தேர்வு எழுத துபாயில் இருந்து பள்ளி மூலம் மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள். இங்கிருந்து ஹால் டிக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்படும். பிறகு எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வு வினாத்தாள்களை துபாய் இந்திய தூதரகத்திற்கு கூரியர் மூலம் அனுப்பபடும். தமிழகத்தில் தேர்வு தொடங்கும் அதே நாளில் இந்திய தூதரகக் கண்காணிப்பாளர் கண்காணிப்பில் தேர்வுகள் நடைபெறும். விடைத்தாள்களை இந்திய தூதரக அதிகாரிகள் தமிழக அரசு தேர்வுத்துறைக்கு அனுப்பி வைப்பார்கள். இந்திய தூதரகம் மூலம் மதிப்பெண் பட்டியல் துபாய் மாணவர்களுக்கு வழங்கப்படும் என தெரிகிறது.

No comments: