Saturday, March 28, 2015

ஆசிரியர் தகுதி தேர்வு : இலவச பயிற்சி வகுப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு (டெட்) எழுத, இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதாக, மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் விடுத்துள்ள அறிக்கை:

நிரந்தர பணியிடத்திற்கு முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேவை


மாற்றுத்திறனாளிகளுக்கு கல்விக் கடன்


உடல் ஊனமுற்ற மாணவர்கள் உயர்கல்வி படிக்க கல்விக் கடன் வழங்கப்படுகிறது.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறையின் கீழ் தேசிய ஊனமுற்றோர் பைனான்ஸ் அன்ட் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்படுகிறது.
இந்தியாவில் உள்ள 40 அல்லது அதற்கு மேல் ஊனத்துடன் உள்ள நபர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கு கடன் வழங்கப்படுகிறது.
பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பொறியியல், மருத்துவம், நிர்வாகம், ஐடி போன்ற படிப்புகளை படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சமும், வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சமும கல்விக் கடனாக வழங்கப்படும்.கல்விக் கடனுக்கு ஆண்டிற்கு 4% வட்டி வசூலிக்கப்படும். மாணவியருக்கு 3.5% வட்டி வசூலிக்கப்படும்.
மேலும் விவரங்கள் அறிய www.nhfdc.nic.in இணையதளத்தைப் பார்க்கவும்.

அதிகம் தூங்கினால் ஆபத்து: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இளம் வயதினர் இரவு 9 மணி நேரத்துக்கும் மேல் தூங்கினால் விரைவில் மரணம் ஏற்படுவதற்கான  வாய்ப்புகள் உள்ளதாக இங்கிலாந்தை சேர்ந்த அறிவியல் வல்லுநர்கள் தங்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
குறைவாக தூங்குபவர்களை விட அளவுக்கு அதிகமாக தூங்குபவர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாககவும், ஒரு நாளைக்கு இரவு 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூங்குவதே நீண்ட காலம் உயிர்வாழ்வதற்கும் உடலுக்கும் உகந்த என்று விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படாததன் காரணம் என்ன?




திறமையான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்க வேண்டும் என்பதற்காகவே ஆசிரியர் தகுதித் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு பற்றிய அறிவிப்பே வெளிவராமல் உள்ளது. தேர்வு நடத்தப்படாததன் காரணம் என்ன? தேர்வுக்காக இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்பது குறித்து காணலாம்.

அடுத்தவரின் செல்போனுக்கு அனுப்பிய செய்திகளை அழிக்க உதவும் புதிய ஆப் அறிமுகம்

ஏதோ ஒரு கோபத்தில் மெசேஜ் அனுப்பிவிட்டு, அது சென்ட் ஆன அடுத்த நொடியே அவசரப்பட்டு அனுப்பி விட்டோமே என்று வருத்தப்படுவது, செல்போன் உபயோகிக்கும் அனைவரும் ஒரு முறையாவது அனுபவித்திருக்கும் வேதனை. அந்த வேதனையை போக்க 'ராகெம்' என்ற நிறுவனம் ஒரு புதிய அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

Results of Departmental Examinations - DECEMBER 2014

அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.எட்., படிக்கும் ஆசிரியர்கள் ......

தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.எட்., படிக்கும் நேர்வுகளில், கற்பித்தல் பயிற்சியினை அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே 6,7 மற்றும் 8 வகுப்புகளில் மேற்கொள்ள அரசு உத்தரவு

Friday, March 27, 2015

ARGTAவை JACTTO அமைப்புடன் இணைத்துக்கொண்டமைக்கு, JACTTO அமைப்பின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் ARGTA சார்பில் நன்றி தெரிவிப்பு

 21.03.14 சென்னை சூளைமேடில் தழிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற JACTTO உயர் மட்டக் குழு கூட்டத்தில் நமது "அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் (ARGTA)

வேறு துறைக்கு எந்த நிலையில் மாறினாலும் CPS NUMBER மாற்றம் செய்ய தேவையில்லை

CPS திட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எந்த துறையில் பணிபுரிபவர்கள் ஆக இருந்தாலும் வேறு துறைக்கு எந்த நிலையில் மாறினாலும் CPS NUMBER மாற்றம் செய்ய தேவையில்லை

அரசு ஊழியர்களின் ஊதியத்துக்கு ரூ.41,215 கோடி -ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும்

அரசு ஊழியர்களின் ஊதியத்துக்கு ரூ.41,215 கோடி-ஏழாவது ஊதியக் குழுவின்பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று கருதப்படுவதன் அடிப்படையில் செலவு விவரங்கள் கணிப்பு.தமிழக அரசு ஊழியர்களின் மாத ஊதியத்துக்காக ரூ.41,215 கோடிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து நிதிநிலை அறிக்கையில்கூறப்பட்டுள்ளதாவது: 

Thursday, March 26, 2015

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் என்ஜினீயரிங் சர்வீசஸ்

மத்திய அரசின் பல்வேறு பணிகளில் சேர விரும்பும் பொறியியல் பட்டதாரிகள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் என்ஜினீயரிங் சர்வீசஸ் தேர்வை எழுத வேண்டும்.

நேர்மை, அர்ப்பணிப்பு உணர்வு இருந்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும்

நேர்மை, அர்ப்பணிப்பு உணர்வு இருந்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறினார்.
சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக 10-ஆவது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஏப்ரல் 19ல் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த ஜாக்டோ முடிவு

இன்று சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ உயர்மட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் ஏப்ரல் 19ல் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம்  நடத்த ஜாக்டோ முடிவு எடுக்கப்பட்டுள்ளது.மேலும் மார்ச்30ம் தேதி ஜாக்டோ மீண்டும் கூடவுள்ளது.

65 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மாநகராட்சி வசம் ஒப்படைக்க உத்தரவு

கோவை மாநகராட்சி விரிவாக்கப்பகுதியில், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 65 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை, மாநகராட்சி வசம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


'சஸ்பெண்ட்' நடவடிக்கையால் ஆசிரியர் உஷார்: 'பிட்' மாணவர்கள் மீது பிடியை இறுக்குகின்றனர்

சேலம்: மாணவர்கள், 'பிட்' அடிப்பதை கண்டுபிடிக்காமல் விட்டால், 'சஸ்பெண்ட்' உத்தரவு பாயும் என்பதால், தேர்வுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர், உஷார் அடைந்துள்ளனர்.

வந்தாச்சு பிட் அடிப்பதிலும் லேட்டஸ்ட் தொழில்நுட்பம்!


'பிட் அடித்து வாழ்வரே வாழ்வார் மற்றவரெல்லாம் பெயில் ஆகி போவார் 'என்ற பிட்டுலகின் பொன்மொழியில் நவீன பொன்மொழி 'அகர முதல பிட்டெல்லாம் வாட்ஸ் அப் பிட்டாகுமா? 'என்பதே. லேட்டஸ்ட் technology என நாம் நினைத்திருப்பதை சீனர்கள் சில வருடங்களுக்கு முன்னரே செய்து விட்டார்கள். நாம்தான் இதிலும் லேட். 
உலகிலேயே சீனாவில் உள்ள மாணவர்கள்தான் மிகவும் அதி நவீன  தொழில் நுட்பத்தை பயன்படுத்தி  (HI TECH), பரீட்சையில் பிட் அடிக் கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ஏழை மாணவர்களுக்கு கல்வி உரிமை சட்டத்தை முழுதாக அமல்படுத்த தனியார் பள்ளிகள் மறுப்பு:

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில், 21 லட்சம் இடங்கள் உள்ள நிலையில், அதில், 29 சதவீத இடங்களே நிரப்பப்படுகின்றன. கண்காணிப்பு இல்லாதது; இதுபோன்ற வசதி இருக்கிறது என்பது தெரியாதது; தனியார் பள்ளிகளின் பணத்தாசை போன்றவற்றால், இந்த உயரிய திட்டம் பாழாகிறது. ஏராளமான ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வியும் கிடைக்காமல் போகிறது.

போட்டித் தேர்வு அறிவிப்பு: ஓவிய ஆசிரியர்கள் குழப்பம்.

             தமிழகத்தில் 3 ஆயிரம் ஓவிய ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வை கல்வி தகுதி தெரிவிக்காமல், ஆசிரியர் தேர்வு வாரியம்(டி.ஆர்.பி.,) அறிவித்துள்ளதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

தனியார் பள்ளிகளைப் போன்று அரசுப் பள்ளிகளிலும் பிரி.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. -வாசகர் அரங்கம்

     தனியார் பள்ளிகளைப் போன்று அரசுப் பள்ளிகளிலும் பிரி.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்கிற வாசகர் அரங்கம்

தமிழக பட்ஜெட் :107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்!!

       107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

விடைத்தாள் திருத்த வராவிட்டால்...: ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை எச்சரிக்கை

        பிளஸ் 2 தேர்வில், மொழிப்பாட விடைத்தாள் திருத்தும் பணி பெரும்பாலும் முடிந்துவிட்டது. கணினி அறிவியல், புவியியல் மற்றும் வணிகவியலுக்கு, விடைத்தாள் திருத்தும் பணி துவங்குகிறது. பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் முடிய, முடிய, விடைத்தாள் திருத்தும் பணியும் நடந்து வருகின்றன. முதற்கட்ட விடைத்தாள் திருத்தும் பணி, கடந்த 16, 17ம் தேதிகளில் துவங்கியது.

2015ம் ஆண்டு தமிழக பட்ஜெட் - கல்வித்துறைக்கான கவனிப்பு என்ன?

        2015-16 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.20,936 கோடியும், உயர்கல்விக்கு ரூ.3,696 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை, முதலமைச்சரும், நிதியமைச்சருமான பன்னீர் செல்வம், மார்ச் 25ம் தேதி (இன்று) சட்டசபையில் தாக்கல் செய்தார்.


அதில் கல்வித்துறை மற்றும் மாணவர் நலனுக்காக நிதியாதாரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றின் விபரங்கள் வருமாறு,

Monday, March 23, 2015

பறக்கும் கார்

காமிக்ஸ் புத்தகங்களிலிருந்து ஜேம்ஸ் பாண்ட் படம் வரை வெகுகாலமாக இடம்பிடித்திருக்கும் கற்பனை பறக்கும் கார். இன்னும் 24 மாதங்களில் அந்த பழங்காலக் கற்பனையை நிஜமாக்கிவிடுவோம் என்கிறது, ஏரோமொபில் என்ற நிறுவனம். ஐரோப்பாவிலுள்ள ஸ்லோவாகியாவை சேர்ந்த ஏரோமொபில் சென்ற ஆண்டு பறக்கும் காரின் மாதிரி வடிவத்தை வெளியிட்டது. இந்த காரை நகருக்குள் சகஜமாக ஒட்டி செல்லவும், நகருக்கு வெளியே அல்லது விமான நிலைய ஓடு தளத்திலிருந்து தன் உலோக இறக்கையை விரித்து வானில் பறந்து செல்லவும் முடியும் என்று அறிவித்தது. 

Answer Keys for CTET-FEB 2015 Examination



Paper-I
Paper-I Main
English & Hindi
Assamese,Bangla,Garo,
Gujararti,Kannada,Khasi,Malayalam,
Manipuri,Marathi,Mizo,Nepali,
Oriya,Punjabi,Sanskrit,Tamil,Telugu,
Tibetan,Urdu
ALL SET 
Assamese,Bangla,Garo,
Gujararti,Kannada,Khasi,Malayalam,
Manipuri,Marathi,Mizo,Nepali,
Oriya,Punjabi,Sanskrit,Tamil,Telugu,
Tibetan,Urdu
ALL SET (Visually Impaired) 
Paper-II
Paper-II MainALL SET 
(Including Visually Impaired)
English & HindiALL SET 
(Including Visually Impaired)
Assamese,Bangla,Garo,
Gujararti,Kannada,Khasi,Malayalam,
Manipuri,Marathi,Mizo,Nepali,
Oriya,Punjabi,Sanskrit,Tamil,Telugu,
Tibetan,Urdu
ALL SET 
Assamese,Bangla,Garo,
Gujararti,Kannada,Khasi,Malayalam,
Manipuri,Marathi,Mizo,Nepali,
Oriya,Punjabi,Sanskrit,Tamil,Telugu,
Tibetan,Urdu
ALL SET (Visually Impaired) 

TRB NEWS

மின் சக்தியில் பறக்கும் விமானம்: நாஸா சோதனை:

     மின் சக்தியில் இயங்கும் 18 விசைகளைப் பொருத்திய இறக்கை கொண்ட விமானத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா வடிவமைத்துள்ளது.
 

12th Standard March 2015 Key Answer Download



  • Prepared by - Mr. L.MURUGAIYAN M.Sc,B.Ed,M.Phil.
    • P.G.Asst.in Biology,
  • St. Joseph’s Hr.Sec.School .
  • Vichoor – 614617,
  • Manamelkudi – Tk, Pudukkottai – Dt.

  • M.GEETHA, M. Sc.( IT )
  • V.M.G.R.R.SRI SARADA SAKTHI MAT. HR. SEC. SCHOOL,


TNTET EXAMS ஆசிரியர் தகுதித் தேர்வு: உண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக...

TNTET EXAMS ஆசிரியர் தகுதித் தேர்வு: உண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக...: 1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- ரூ.600/- 2. அழகப்பா பல்கலைக்கழகம்- ரூ.500/- 3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்-ரூ.500/- 4. இந்திராகாந்தி பல...

உண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை

1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- ரூ.600/-
2. அழகப்பா பல்கலைக்கழகம்- ரூ.500/-
3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்-ரூ.500/-
4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -ரூ.200/-
5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்- ரூ.1000/-
6. பாரதியார் பல்கலைக் கழகம்- ரூ.500/-
7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் -ரூ.1000/-
8. சென்னைப் பல்கலைக் கழகம்- அரசு ஊழியர்களுக்கு இலவசம்
9. மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் -ரூ.1500/-
10. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் ரூ.500/-
11. சாஸ்த்ரா பல்கலைக் கழகம்-ரூ.500/-
12. பெரியார் பல்கலைக் கழகம்- ரூ.250/-
13. Tamilnau Teacher Education University ரூ.350/-
14. சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.
15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்- ரூ.275/

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மார்ச் 28-இல் பணி நியமன கலந்தாய்வு; மூன்றே மாதங்களில் பணி நியமனம்

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1,789 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருகிற 28-ஆம் தேதி பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,789 பேருக்கான பணி நியமன கலந்தாய்வு இணையதளம் மூலமாக வருகிற 28-ஆம் தேதி நடைபெறுகிறது.
அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் இந்தக் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனத்துக்கான கலந்தாய்வு வருடவாரியாக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்டுள்ள வரிசை எண் அடிப்படையில் நடத்தப்படும்.
முதலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான கலந்தாய்வும், பின்னர் வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான கலந்தாய்வும் நடத்தப்படும்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட பணி நாடுநர்கள் அனைவரும் தங்களது முகவரியில் குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.
கலந்தாய்வுக்கு வரும்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு, இத்தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்று, அசல் கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றுடன் காலை 9.30 மணிக்கு வர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மூன்றே மாதங்களில் பணி நியமனம்: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற்றது. 1.90 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் பிப்ரவரி 6-ஆம் தேதி வெளியிடப்பட்டன. தேர்வுப் பட்டியல் பிப்ரவரி 26-ஆம் தேதி வெளியிடப்பட்டது. வருகிற 28-ஆம் தேதி பணி நியமனக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
தேர்வு நடைபெற்ற பிறகு முடிவுகளை வெளியிடவும், பணி நியமனத்துக்கும் குறைந்தது 6 மாதங்கள் ஆகும். ஆனால், 1,789 ஆசிரியர்கள் 3 மாதங்களில் பணி நியமனம் செய்யப்படுகின்றனர்

புதிய கல்விக் கொள்கை ஆலோசனை: 8வது வகுப்பு வரையில் கட்டாய தேர்ச்சிக்கு மாநிலங்கள் எதிர்ப்பு

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை ஆலோசனையில், 8ம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி முறைக்கு பல்வேறு மாநில அரசுகளும் எதிர்த்து தெரிவித்துள்ளன. பள்ளிக் கல்வியிலும், உயர் கல்வியிலும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து, புதிய கல்விக் கொள்கை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான, மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் சார்பில் மாநில கல்வித்துறை அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமை வகித்தார். இதில், பல்வேறு மாநில கல்வி அமைச்சர்களும், தலைமை செயலர்களும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். குஜராத் மாநில கல்வி அமைச்சர் புபேந்திரசிங் சவுதாசமா கூறுகையில், 'நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் இளைஞர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அதற்கேற்ப, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் இருக்க வேண்டும். கல்விக்காக அதிக நிதி செலவழிக்கும் மாநிலத்துக்கு மத்திய அரசு சார்பில் ஊக்க நிதி வழங்கலாம். தரமான ஆசிரியர்கள், தொடர்ச்சியான ஆசிரியர் பயிற்சி வகுப்புகளை உறுதி செய்ய வேண்டும்' என்றார். மத்தியப் பிரதேச மாநில கல்வி அமைச்சர் பராஸ் சந்தர் கூறுகையில், '8ம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி கொள்கையால் கல்வியின் தரம் பாதிக்கப்படுகிறது. சுமாராக படிக்கும் மாணவர்கள் 8ம் வகுப்புக்கு பிறகு அடுத்தடுத்த தேர்வுகளை எதிர்கொள்வதில் சிரமப்படுகின்றனர். அவர்களால் பொதுத் தேர்வுகளில் வெற்றி பெற முடியாமல் போகிறது' என்றார். இதே கருத்தை அசாம், நாகலாந்து, சட்டீஸ்கர், ராஜஸ்தான் மாநில அமைச்சர்களும் வலியுறுத்தினர். பள்ளி தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டுமெனவும் பல அமைச்சர்கள் வலியுறுத்தினர். கூட்டத்துக்கு பின் பேட்டியளித்த அமைச்சர் ஸ்மிருதி இரானி, கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டுமென கோரிக்கைகள் அதிகளவில் வந்துள்ளன. புதிய கல்விக் கொள்கையில் இதற்கான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்' என்றார். புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பல தரப்பினரிடமும் ஆலோசனை கேட்கப்பட்டு வருகிறது