Monday, March 23, 2015

பறக்கும் கார்

காமிக்ஸ் புத்தகங்களிலிருந்து ஜேம்ஸ் பாண்ட் படம் வரை வெகுகாலமாக இடம்பிடித்திருக்கும் கற்பனை பறக்கும் கார். இன்னும் 24 மாதங்களில் அந்த பழங்காலக் கற்பனையை நிஜமாக்கிவிடுவோம் என்கிறது, ஏரோமொபில் என்ற நிறுவனம். ஐரோப்பாவிலுள்ள ஸ்லோவாகியாவை சேர்ந்த ஏரோமொபில் சென்ற ஆண்டு பறக்கும் காரின் மாதிரி வடிவத்தை வெளியிட்டது. இந்த காரை நகருக்குள் சகஜமாக ஒட்டி செல்லவும், நகருக்கு வெளியே அல்லது விமான நிலைய ஓடு தளத்திலிருந்து தன் உலோக இறக்கையை விரித்து வானில் பறந்து செல்லவும் முடியும் என்று அறிவித்தது. 

ஆனால், கடந்த வாரம் அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் நடந்த ஒரு தொழில் காட்சியில், ஏரோமொபைலின் இணை நிறுவனரும் சி.இ.ஓ., வுமான ஜுராஜ் வாகுலிக் பலரையும் ஆச்சரியப்படுத்தினார். இந்த கண்காட்சியில் நிறுத்தியிருக்கும் இந்த பறக்கும் காரின் மாதிரியை விரைவில் வர்த்தக ரீதியில் வெளியிடுவதற்கான வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன - என, ஊடகங்களிடம் தெரிவித்தார் வாகுலிக். 2017ல் ஏரோமொபைல் வெளியிடவிருக்கும் அந்த பறக்கும் கார் 435 மைல்கள் வரை பறக்கும். தரையிலிருந்து வானுக்கு கிளம்பும் வேகம் மணிக்கு, 81 கி.மீ., வானில் அதன் வேகம் மணிக்கு 124 மைல்கள் இருக்கும். வர்த்தக ரீதியிலான விமானங்களுக்கு இருப்பது போல வானை எட்டியதும் தானாகவே இலக்கை நோக்கி பறக்கும் -ஆட்டோ பைலட்- வசதியும் இருக்கும். இரண்டு பேர் அமர்ந்து செல்லக்கூடிய இந்த காரை இப்போதே சிலர் புக்கிங் செய்திருக்கின்றனர்.

No comments: