Thursday, March 26, 2015

நேர்மை, அர்ப்பணிப்பு உணர்வு இருந்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும்

நேர்மை, அர்ப்பணிப்பு உணர்வு இருந்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறினார்.
சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக 10-ஆவது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் பேசியதாவது:
 சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு போலியோவை அறவே ஒழிக்கும் லட்சியக் கனவுடன் 4 மருத்துவர்கள் மேற்கொண்ட உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வின் காரணமாகத்தான் தற்போது இந்தியா போலியோ அற்ற நாடாகத் திகழ்கிறது. எனவே நேர்மையும், அர்ப்பணிப்பு உணர்வும் இருந்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும்.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து சந்திரனுக்கு செயற்கைக்கோள் அனுப்புவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பது வியக்க வைக்கிறது.
இது, இந்திய அறிவியல் துறையில் சென்னை சிறப்பாகச் செயல்படுவதை உணர்த்துகிறது என்றார் அவர். விழாவில் 14 ஆயிரம் பேருக்கு இளநிலை, முதுநிலை, முனைவர் பட்டங்கள் வழங்கப்பட்டன.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் ("இஸ்ரோ') தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார், கலிபோர்னியா பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் பிரதீப் கே.கோஸ்லா, இந்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை செயலர் அசுதோஷ் சர்மா ஆகியோருக்கு கெüரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

No comments: