Friday, March 27, 2015

அரசு ஊழியர்களின் ஊதியத்துக்கு ரூ.41,215 கோடி -ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும்

அரசு ஊழியர்களின் ஊதியத்துக்கு ரூ.41,215 கோடி-ஏழாவது ஊதியக் குழுவின்பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று கருதப்படுவதன் அடிப்படையில் செலவு விவரங்கள் கணிப்பு.தமிழக அரசு ஊழியர்களின் மாத ஊதியத்துக்காக ரூ.41,215 கோடிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து நிதிநிலை அறிக்கையில்கூறப்பட்டுள்ளதாவது: 

வரும் நிதியாண்டில் வரவு- செலவுத் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கான ஊதியம் குறித்த ஒதுக்கீடு ரூ.41, 215.57கோடியாகவும், ஓய்வூதியம், இதரஓய்வுக்கால பலன்கள் குறித்தசெலவினத்துக்கான ஒதுக்கீடுரூ.18,678.6 கோடியாகவும்இருக்கும். இது வரவு-செலவுத் திட்டமதிப்பீட்டில் சம்பளம்-ஓய்வூதியம்குறித்த செலவுகள்மொத்தவருவாய்ச் செலவுகளில் 40.65சதவீதமாகும். அகவிலைப்படிஉயர்வு,ஊதியஉயர்வு, காலிப்பணியிடங்களைநிரப்புதல்ஆகியவற்றால் படக்கூடியசெலவினங்களின் காரணமாக, வரும்நிதியாண்டிகளில் இதன் வளர்ச்சிவிகிதம் முறையே 11, 25 சதவீதமாகஇருக்கும் எனக் கருதப்படுகிறது.வரும் 2017-18-ஆம் ஆண்டு முதல்ஏழாவது ஊதியக்குழுவின்பரிந்துரைகள்நடைமுறைப்படுத்தப்படும் என்றுகருதப்படுவதன்அடிப்படையில்செலவு விவரங்கள் கணிக்கப்பட்டுள்ளன

No comments: