Friday, March 27, 2015

ARGTAவை JACTTO அமைப்புடன் இணைத்துக்கொண்டமைக்கு, JACTTO அமைப்பின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் ARGTA சார்பில் நன்றி தெரிவிப்பு

 21.03.14 சென்னை சூளைமேடில் தழிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற JACTTO உயர் மட்டக் குழு கூட்டத்தில் நமது "அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் (ARGTA)

"சார்பில் மாநில பொதுச் செயளாலர் தா.வாசுதேவன், விழுப்புரம் . சசிகுமார் காஞ்சிபுரம் ஆகியோர் கலந்து கொண்டோம். நமது முக்கிய கோரிக்கையான பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியர்களாக அனுப்புதல்,3 வருட மாறுதலை திரும்பப் பெறுதல் ஆகியவற்றை JACTTOவின் கோரிக்கையுடன் சேர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
கட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம் 19.04.15 குள் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் உண்ணாவிரதம் ,மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. கடந்த 08.03.15 அன்று தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வெற்றிகரமாக நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.நமது ARGTA வை JACTTO அமைப்புடன் இணைத்துக்கொண்டமைக்கு ,JACTTO அமைப்பின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் ARGTA வின் மாநில தலைவர் இராஜ்குமார் மதுரை, மாநில பொதுச் செயளாலர் வாசுதேவன் ,மாநில பொருளாளர் நவநீதகிருஷ்ணன் மதுரை மற்றும் அனைத்து மாநில,மாவட்ட பொருப்பாளர்கள்,உறுப்பினர்கள் ஆகிய அனைவரின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்

No comments: