Saturday, March 28, 2015

அதிகம் தூங்கினால் ஆபத்து: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இளம் வயதினர் இரவு 9 மணி நேரத்துக்கும் மேல் தூங்கினால் விரைவில் மரணம் ஏற்படுவதற்கான  வாய்ப்புகள் உள்ளதாக இங்கிலாந்தை சேர்ந்த அறிவியல் வல்லுநர்கள் தங்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
குறைவாக தூங்குபவர்களை விட அளவுக்கு அதிகமாக தூங்குபவர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாககவும், ஒரு நாளைக்கு இரவு 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூங்குவதே நீண்ட காலம் உயிர்வாழ்வதற்கும் உடலுக்கும் உகந்த என்று விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக 1 கோடி மக்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஒருநாளைக்கு 9 மணி நேரத்திற்கு மேல் தூங்குபவர்கள் விரைவில் உயிரிழப்பதற்கான 30 சதவிகித வாய்ப்புகளும், 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு விரைவில் உயிரிழப்பதற்கு 12 சதவிகிதம் வாய்ப்புள்ளதாக வார்விக் பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. 

No comments: