Monday, March 23, 2015

மின் சக்தியில் பறக்கும் விமானம்: நாஸா சோதனை:

     மின் சக்தியில் இயங்கும் 18 விசைகளைப் பொருத்திய இறக்கை கொண்ட விமானத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா வடிவமைத்துள்ளது.
 


               இந்த இறக்கையின் சோதனையோட்டத்தை இவ்வாண்டு இறுதியில் நடத்த நாஸா திட்டமிட்டுள்ளது.18 விசைகள்  (புரொபெல்லர்) பொருத்திய விமான இறக்கையின் மாதிரி வடிவை ஒரு வாகனத்தில் (படம்) பொருத்தி, அதனை மணிக்கு 112 கி.மீ. வேகத்தில் நிலத்தில் செலுத்தி சோதனை நடத்தப்படும்.
          எதிர்காலத்தில் முற்றிலும் மின் சக்தியிலேயே செலுத்தக் கூடிய விசைகளைக் கொண்ட விமானங்களை உருவாக்க இந்த சோதனை உதவும் என நாஸா தெரிவித்துள்ளது.

No comments: