Wednesday, August 6, 2014

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

        டிஎன்பிஎஸ்சி குரூப்-1 எழுத்துத் தேர்வு பயிற்சிக்கு ஆன்-லைனில்விண்ணப்பிக்கலாம் என மனித நேயம் ஐஏஎஸ் கட்டணமில்லா கல்வியகம் தெரிவித்துள்ளது.


டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று, முதன்மை தேர்வில் பங்குபெற வுள்ளவர்களுக்கான எழுத்துத் தேர்வு பயிற்சி ஆக. 8 முதல் 21-ம் தேதி வரை நடத்தப்படும். அதற்குwww.saidais.comஎன்ற இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பப் படிவத்தில் விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும்.ஏற்கெனவே குரூப்-1 முதன்மை தேர்வு எழுதி வாய்ப்பிழந்தவர்களுக்கும், நேர்முகத் தேர்வு வரை சென்று வாய்ப்பிழந்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்று மனிதநேயம் ஐஏஎஸ் கட்டணமில்லா கல்வியகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






No comments: