Saturday, August 16, 2014

‘நெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்



கல்லூரி மற்றும் பல்கலைக் கழக உதவி பேராசிரியர் பணியில் (அறிவியல் பாடங்கள்) சேருவதற்கான “நெட்” தகுதித்தேர்வை மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ் ஐஆர்) ஆண்டுக்கு 2 தடவை நடத்துகிறது.

இந்த ஆண்டுக் கான 2-வது நெட் தேர்வு டிசம்பர் மாதம் 21-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு ஆன்லைனில் விண்ணப் பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 23-ம்தேதி வரையும், தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 22-ம் தேதி வரையும், ஆன்லைன் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, அனுப்பு வதற்கான கடைசித் தேதி ஆகஸ்ட் 29-ம்தேதி வரையும் நீட்டிக்கப்படுவதாக சிஎஸ்ஐஆர் “நெட்” தேர்வு பிரிவு முதுநிலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி நரேஷ் பால் அறிவித் துள்ளார். சிஎஸ்ஐஆர் நெட் தகுதித்தேர்வை முது கலை அறிவியல், கணித பட்டதாரிகள் எழுதலாம். இந் தேர்வுக்கு www.csirhrdg.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments: