Thursday, August 28, 2014

Flash News: புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களிலிருந்து 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா சற்று முன் வழங்கினார்.


Flash News: புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களிலிருந்து 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா சற்று முன் வழங்கினார்.

7 பேருக்கு பணி நியமன ஆணை:

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடைநிலைஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்களிலிருந்து 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா சற்று முன் வழங்கினார்.
இந்த ஆண்டு பட்டதாரிஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் என 13ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வைத் தொடங்கி வைக்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களில்7பேருக்கான பணி நியமன ஆணையை முதல்வர் ஜெயலலிதா நேரில் வழங்குகினார்.

பணி நியமனக் கலந்தாய்வு எப்போது?

இப்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு பெரும்பாலும் அடுத்த வாரத்தில் இருக்கும் எனத் தெரிகிறது. இந்தப்பணி நியமனக்கலந்தாய்வு தேதிகள் விரைவில் இறுதிசெய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: