Saturday, August 16, 2014

வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டுவிட்டன: எஸ்.ராமகிருஷ்ணன்

நாட்டின் பல்வேறு வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டுவிட்டன என்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கூறினார்.


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் யுவ சக்தி இளைஞர் நல அமைப்பு சார்பில் இளைஞர்களை ஊக்குவிக்கும் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


                                                           


                                        

 இதில் எஸ்.ராமகிருஷ்ணன் பேசியது:
சிந்தனை மாற்றத்தின் தொடக்கம் மகாத்மா காந்தி. அவரை வாசிக்கத் தொடங்கினால், இந்தியர் என்ற பெருமிதம் தானாகவே உண்டாகும்.
ஆனால், முன்மாதிரியாக இருந்த ஆளுமையை தற்போது நாம் பிம்பமாக மாற்றி வைத்திருக்கிறோம்.

நாட்டின் பல்வேறு வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டுவிட்டன. சென்னை ராஜ்ஜியம் என்பதை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றக் கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த, தியாகி சங்கரலிங்கனார் குறித்து பெரும்பாலானோருக்கு தெரியவில்லை.

அதே சமயம், ஆந்திர மாநிலம் உருவாகக் காரணமாக இருந்த பொட்டி ஸ்ரீ ராமுலுவை ஆந்திரத்தில் போற்றிக் கொண்டாடுகிறார்கள். சங்கரலிங்கனார் குறித்து முதல் வகுப்பு பாடத் புத்தகத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால், நாம் வரலாற்றை தெரிந்திருக்கவில்லை. எனவே மாணவர்கள் இந்திய வரலாற்றைப் படிக்க வேண்டும்.

தாய் மொழியில் கல்வி கற்று, சிந்திக்க வேண்டும். ஆங்கிலம் என்பது மொழியே தவிர அங்கீகாரம் அல்ல.
வளர்வதற்கு இந்தியா, வாழ்வதற்கு வெளிநாடு என்ற நிலை மாற வேண்டும் என்றார்.

No comments: